2026 வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் கொண்டாட்ட ஒத்திகை நிறைவு
பிப்ரவரி 14ஆம் நாள் சீன ஊடக குழுமத்தின் 2026ஆம் ஆண்டு வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சி கொண்டாட்டத்தின் ஐந்தாவது ஒத்திகை வெற்றிகரமாக நிறைவடைந்தது. புத்தாக்க நிகழ்ச்சிகள், பாடல் மற்றும் நடனங்கள், இசை நாடகங்கள், அக்ரோபேட்டிக்ஸ் உள்ளிட்ட பல்வகையான நிகழ்ச்சிகள் காட்சிப்படுத்தப்பட்டு, பண்டிகை சூழ்நிலையை வழங்குகின்றன. இக்கலை நிகழ்ச்சி நடைபெறும் நான்கு கிளை அரங்குகள் முக்கிய அரங்குடன் ஒருங்கிணைந்த முறையில் நிகழ்ச்சிகளை சுமுகமாக வழங்கின. இந்நிலையில், சீன பாரம்பரிய குதிரை ஆண்டின் வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் தயாராகியுள்ளன.
15-Feb-2026