போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2021ஆம் ஆண்டுக்கூட்டத்தின் துவக்க விழாவில் ஷிச்சின்பிங் உரை

போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2021ஆம் ஆண்டுக்கூட்டத்தின் துவக்க விழா 20ஆம் நாள் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் காணொலி வழியாக உரை நிகழ்த்தினார்.

வானொலி

காணொளி

செய்திகள்

 • - 2021-04-21 18:58:30

  தலைவர்களின் உச்சி மாநாட்டில் ஷிச்சின்பிங் பங்கெடுப்பு

  அமெரிக்க அரசுத் தலைவர் பைடெனின் அழைப்பின் பேரில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஏப்ரல் 22ஆம் நாள் காணொளி வழியில் காலநிலை பற்றிய தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்த உள்ளார்.

 • - 2021-04-21 15:40:36

  சீன-அமெரிக்க உறவு பற்றிய சீனத் துணை வெளியுறவு அமைச்சரின் கருத்து

  சீனத் துணை வெளியுறவு அமைச்சர் லெ யூச்செங் ஏப்ரல் 16ஆம் நாள் அமெரிக்கக் கூட்டுச் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், சீன-அமெரிக்க உறவிலுள்ள போட்டி மற்றும் எதிர்ப்பு அம்சங்களில் மட்டுமே அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாகவும், இந்தச் செயல் எதிர்மறையான ஒன்று என்றும் தெரிவித்தார். மேலும், சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான போட்டி, சீரான போட்டியாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், உலகத்துக்குச் சிறப்பான பொறுப்பேற்கும் இரு பெரிய நாடுகளாக, சீனாவும் அமெரிக்காவும் ஒத்துழைப்புகளை விரிவாக்க வேண்டும் என்றும் இரு நாடுகளும் ஒத்துழைப்புகளிலிருந்து நலனைப் பெறலாம் என்றும் குறிப்பிட்டார்.

 • - 2021-04-21 15:19:28

  ஆப்பிரிக்கர்-அமெரிக்கர் ஜார்ஜ் ஃப்ளாய்டு கொலை: தீர்ப்பு வெளியீடு

  சாவனுக்கான தண்டனைக் காலம் 8 வாரங்களுக்குப் பின் அறிவிக்கப்படும்.

 • - 2021-04-21 14:14:48

  கரோனாவின் இரண்டாவது அலையையும் வெல்வோம் - மோடி நம்பிக்கை

  கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்டுத்தும் போக்கில் மாநில அரசுகள் பொது முடக்கத்தைக் கடைசி வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்று இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 • - 2021-04-21 14:10:16

  பொருளாதாரக் கொள்கை போன்று தடுப்பூசிக் கொள்கையும் முக்கியமானது

  உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குநர் கோசி ஒகொஞ்சோ இவேலா 19ஆம் நாள், சீன ஊடகக் குழுமத்தின் செய்தியாளருக்குப் பேட்டியளித்தார். அப்போது,  இன்னலில் போராடும் நாடுகளுக்கு தடுப்பூசி கிடைக்கச் செய்வது சிறந்த பொருளாதார ஊக்கக் கொள்கையாகும் எனக் குறிப்பிட்டார். பொருளாதார மீட்பு மற்றும் வளர்ச்சி கொள்கை போன்று தடுப்பூசிக் கொள்கையும் முக்கியமான ஒன்று என்றும், மேலும் சமமான தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோக முறையை உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

 • - 2021-04-21 10:21:35

  போ ஆவ் ஆசிய மன்றம் ஆசியாவின் நீண்ட கால வளர்ச்சிக்குப் பங்காற்றும்-வாங் ச்சி சான்

  சீனத் துணை அரசுத் தலைவர் வாங் ச்சி சான் 20ஆம் நாள் போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2021ஆம் ஆண்டுக் கூட்டத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு, மன்றத்தின் ஆளுநர்களையும் நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளிகளையும் வரவேற்று உரை நிகழ்த்தி,  சீன மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.கடந்த 20 ஆண்டுகளாக, போ ஆவ் ஆசிய மன்றமானது, அரசியல், வர்த்தகம், கல்வி ஆகிய பல்வேறு துறைகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையை வலுப்படுத்தி, ஒத்துழைப்புக்கு வாய்ப்பை உருவாக்கும் உயர் நிலை மேடையாக மாறியுள்ளது. ஆசிய வளர்ச்சிக்கும், ஆசியா உலகம் இடையேயான பரிமாற்றத்துக்கும் அது முக்கிய பங்காற்றியுள்ளது என்று வாங் ச்சி சான் கூறினார். மேலும், இம்மன்றத்தின் மூலம் ஆகிய ஞானம் உள்ளடக்கிய கருத்துக்களை அதிகமாக உருவாக்கி, ஆசியாவின் நீண்டகால வளர்ச்சி மற்றும் செழுமைக்குச் சிறந்த திட்டத்தை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 • - 2021-04-21 10:10:04

  துருக்கியில் ஃப்ளம்மிங்கோ பறவைகள்

  ஏப்ரல் 18ஆம் நாள் துருக்கி அன்காலா நகரில், ஃப்ளம்மிங்கோ பறவைகள் கூட்டம் கூட்டமாக ஏரியின் மேல் பறந்தன.

 • - 2021-04-21 10:09:04

  யுன் நான் பல்கலைக்கழகத்தில் ரோஜா பூக்கள்

  அண்மையில் யுன் நான் மாநிலத்தின் குன் மிங் நகரில் அமைந்துள்ள யுன் நான் பல்கலைக்கழகத்தில் 2.6 ஹெக்டர் நிலப்பரப்பான ரோஜா பூக்கள் மலர்ந்து வருகின்றன. மாணவர்களும் ஆசிரியர்களும் ரோஜா பூக்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். சமையல் கலைஞர்கள் ரோஜா பூக்களைப் பயன்படுத்தி, இனிப்பு பண்டங்களைத் தயாரித்து வருகின்றனர்.

 • - 2021-04-21 10:06:43

  உலகின் மிகப் பெரிய கேக்

  ஏப்ரல் 19ஆம் நாள் உக்ரேன் ஹார்கோவ் நகரில் 9 சமையல் கலைஞர்கள் இணைந்து உலகின் மிக பெரிய கேக் ஒன்றைத் தயாரித்தனர். அதன் எடை 3 டன்னுக்கும் அதிகம்.

 • - 2021-04-21 10:02:53

  சீன ஊடகக் குழுமத்தின் முதலாவது வெளிநாட்டுக் காணொளி விழா

  2021ஆம் ஆண்டு ஐ.நாவின் சீன மொழி நாளுக்கான நிகழ்ச்சி மற்றும் சீன ஊடகக் குழுமத்தின் முதலாவது வெளிநாட்டுக் காணொளி விழா ஏப்ரல் 20ஆம் நாள் ஜெனீவாவில் வெற்றிக்கரமாக நடைபெற்றது.

 • - 2021-04-20 21:17:15

  பலதரப்புவாத ஆதரவு

  இத்தொற்றுநோய் காலத்தில் நம்பிக்கையின்மையை அகற்றி பலதரப்பவாதம் மற்றும் பலதரப்பு வர்த்த அமைப்பைக் கூட்டாக வலுப்படுத்த வேண்டும்.

 • - 2021-04-20 20:56:22

  சீன அரசு தலைவர்-சௌதி அரேபிய இளவரசர் தொடர்பு

  சீன அரசு தலைவர் ஷிச்சின்பிங் 20ஆம் நாள் சௌதி அரேபிய இளவரசர் முகமத் பின் சல்மனுடன் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டார்.

 • - 2021-04-20 19:29:41

  எண்ணிக்கைகள் மூலம் போ ஆவ் ஆசிய மன்றம் பற்றி அறிந்து கொள்க

  எண்ணிக்கைகள் மூலம் போ ஆவ் ஆசிய மன்றம் பற்றி அறிந்து கொள்க

 • - 2021-04-20 18:59:04

  தடுப்பூசி விநியோகத்தில் நியாயம் தேவை

  இந்திய செரம் ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மைச் செயலாளர் பூனவாலா அண்மையில் கூறுகையில், இந்தியாவின் கொவைட்-19 தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், தடுப்பூசிக்கான மூலப் பொருட்களின் மீதான ஏற்றுமதித் தடையை அமெரிக்கா நீக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

 • - 2021-04-20 17:40:53

  ட்சிங்ஹுவா உலகில் முதல் தர பல்கலைக்கழகம்:ஷிச்சின்பிங் விருப்பம்

  சீனாவின் தலைசிறந்த ட்சிங்ஹுவா பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட 110ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அப்பல்கலைக்கழக முன்னாள் மாணவரான சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஏப்ரல் 19ஆம் நாள் அப்பல்கலைக்கழகத்தில் பயணம் மேற்கொண்டார். இவர் 1975 முதல் 1979ஆம் ஆண்டு வரை அங்கு கல்வி பயின்றார்.

 • - 2021-04-20 17:37:13

  காலநிலை பிரச்சினை பற்றிய சீன-அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை

  2 நாட்கள் நீடித்த காலநிலை பிரச்சினை பற்றிய சீன-அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை நிறைவடைந்தது. இப்பேச்சுவார்த்தை பற்றிய கூட்டறிக்கையை இரு தரப்புகள் 18ஆம் நாள் வெளியிட்டன. சீன-அமெரிக்கா இடையே பதற்றமான உறவு நிலவும் போதிலும், காலநிலை மாற்றப் பிரச்சினையில் கூட்டு முயற்சி மேற்கொள்வதை இரு நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. பிற பிரச்சினைகளில் சீனா மற்றும் அமெரிக்கா இடையேயான நிலைமை இடைவிடாமல் தீவிரமடைந்து வரும் போதிலும், இது இரு நாட்டு ஒத்துழைப்புக்கு, அரிய மாதிரியாகும் என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

 • - 2021-04-20 15:07:53

  உலகின் முதல் நிலை மன்றமாக வளர்ந்து வரும் போ ஆவ் ஆசிய மன்றம்

  போ ஆவ் ஆசிய மன்றம் நிறுவப்பட்ட கடந்த 20 ஆண்டுகளில், உலகில் முதல் நிலை மன்றமாக வளர்ந்து வருகிறது என்று ட்சிங்குவா பல்கலைக்கழகத்தின் தேசிய நாணய ஆய்வகத்தின் தலைவர் ட்சு மின் தெரிவித்தார்.

 • - 2021-04-20 14:45:46

  ஐ.நா பாதுகாப்பவையின் உயர் நிலை விவாதத்தில் வாங் யீ உரை

  சீன அரசவை உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ ஐ.நா பாதுகாப்பு அவை உயர் நிலை பொது விவாதத்தில் கலந்து கொண்டார்.

 • - 2021-04-20 11:03:30

  ஹான் வம்சக் காலத்தின் அரிசிகள் கண்டுபிடிப்பு

  தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் சீனாவின் ஷான்ஷி மாநிலத்தின் சியன்யாங் நகரில் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ள ஹான் வம்சக் காலத்தின் கல்லறை ஒன்றைக் கண்டறிந்தனர். இக்கல்லறையில் இருந்து இதுவரை சுமார் 100 தொல் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் தானியக் களஞ்சியம் ஒன்று உள்ளது. அவற்றின் உள்ளே அரிசிகள் காணப்படுகின்றனடலாம். ரொம்ப வியப்பு!

 • - 2021-04-20 11:01:38

  இறந்த கடலில் அற்புதமான பயணம்

  வீரர்கள் சிறு படகுகளின் மூலம் இறந்த கடலில் பயணம் மேற்கொள்ளும் காட்சி  தரையில் செல்வதைப் போன்று உள்ளது. அந்த அற்புதமான காட்சிகளை நீங்களும் கண்டு மகிழுங்கள்.