தைவான் விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா எதிர்ப்பு
2021-01-14 20:31:57

அமெரிக்கத் துணை வெளியுறவு அமைச்சர் கெய்த் க்ராச், சமூக ஊடகத்தில் தைவானுக்கு பாம்பியோ "சுதந்திர நாடு" என்ற தகு நிலையை வழங்கியதாகப் பதிவேற்றினார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவ் லிஜியன் கூறுகையில், க்ராச்சின் இக்கூற்று, சர்வதேச உறவுகளின் அடிப்படை விதிமுறைகளையும், ஒரே சீனா என்ற கோட்பாட்டையும், மூன்று சீன-அமெரிக்க கூட்டு அறிக்கைகளையும், தைவான் பிரச்சினையில் அமெரிக்காவின் அரசியல் வாக்குறுதியையும் கடுமையாக மீறியுள்ளன. இதற்கு சீனா உறுதியாக எதிர்ப்பையும், கடும் கண்டனத்தையும் தெரிவிக்கிறது. அரசியல் மூலம், தைவான் விவகாரத்தில் தலையிடுவதையும், அமெரிக்காவிற்கும் தைவானுக்கும் இடையிலான அதிகாரப் பரிமாற்றங்களையும் அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.