கரோனா வைரஸ் குறித்து ஆராய சீனா வந்துள்ள சர்வதேச அறிவியலாளர் குழு
2021-01-14 11:03:36

10 நாடுகள் மற்றும் நிறுவனங்களைச் சேர்ந்த புகழ்பெற்ற நிபுணர்கள் அடங்கிய சர்வதேச அறிவியலாளர் குழு, சீனாவுக்கு வருகை தந்து ஜனவரி 14ஆம் தொடங்கி, சீன நிபுணர்களுடன் இணைந்து புதிய ரக கரோனா வைரஸ் தோற்றம் குறித்த அறிவியல் ஆராய்ச்சியில் பங்கேற்கின்றது.

வூஹான் நகரில் கண்டறியப்பட்ட தொடக்கக் கால கரோனா தொற்றாளர்கள், நோய்தொற்றுக்கான சாத்தியமான பாதை மற்றும் நோய்தொற்றுடன் தொடர்பு இருக்கக் கூடிய விலங்குகள் பற்றிய ஆராய்ச்சியை இக்குழுவைச் சேர்ந்த நிபுணர்கள் ஆய்வு மேற்கொள்வார்கள் என்று உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஹாரிஸ் எடுத்துக்கூறினார்.

இந்த அறிவியலாளர்கள், தரவு மற்றும் ஆராய்ச்சி முடிவுகளைத் தொகுத்து, பகிர்ந்து கொள்ளும் அடிப்படையில், தொழில்முறை சார்ந்த ஆலோசனைகளை வழங்கி, ஆராய்ச்சி திசையை முன்வைப்பதை முக்கியக் கடமைகளாகக் கொண்டு செயல்படுவர் என்றும் ஹாரிஸ் தெரிவித்தார்.

ஆராய்ச்சியானது அறிவியல் பற்றியதேயன்றி, அரசியல் பற்றியதல்ல என்னும்  உலகச் சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் கருத்தையும் ஹாரிஸ் மேற்கோகாட்டி தெரிவித்தார்.