அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டார்பக்ஸ் தொழில் நிறுவனத் தலைவருக்கு ஷிச்சின்பிங் கடிதம்
2021-01-14 15:47:59

அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டார்பக்ஸ் தொழில் நிறுவனத்தின் இயக்குநர் குழுவின் கெளரவத் தலைவர் ஹோவர்ட் ஷால்ட்ஸ் எழுதிய கடிதத்துக்குச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 6ஆம் நாள் பதிலளித்தார். அக்கடிதத்தில் ஸ்டார்பக்ஸ் தொழில் நிறுவனம், சீன-அமெரிக்கப் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பையும் இரு நாட்டு உறவு வளர்ச்சியையும் முன்னேற்றுவதற்குத் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றுமாறு அவர் ஊக்கமளித்தார்.

மேலும், சோஷலிச நவீனமயமாக்கத்தைப் பன்முகங்களிலும் கட்டியமைக்கும் போக்கில், சீனாவில் ஸ்டார்பக்ஸ் தொழில் நிறுவனம் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாட்டுத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்குச் சீனா மேலதிக அளவில் வாய்ப்புகளை வழங்க உள்ளதாகவும் ஷிச்சின்பிங் தெரிவித்துள்ளார்.