கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட துருக்கி சுகாதார அமைச்சர்
2021-01-14 17:57:00

சீனாவின் சினோவாக் பயோடெக் நிறுவனத்தால் ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசியை, துருக்கி சுகாதார அமைச்சர் ஃபாரெட்டின் கோக  ஜனவரி 13-ஆம் நாள் போட்டுக் கொண்டார். அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டது தொலைக்காட்சி மூலம் பொது மக்களுக்கு நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

அன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் பேசுகையில், சீனாவின் தடுப்பூசி பாதுகாப்பாக உள்ளதாகவும், ஜனவரி 14 ஆம் நாள் முதல்  நாட்டிலுள்ள அனைத்து  மருத்துவப் பணியாளர்களுக்கும் சீனாவின் தடுப்பூசிகள் போடப்பட்டவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தடுப்பூசியை போட்டுக் கொள்வதில்  துருக்கி அரசு அதிகாரிகள் பொது மக்களுக்கு சிறந்த முன்மாதிரியை உருவாக்க வேண்டும் என்றும், இயல்பான வாழ்க்கையை மீட்க, பொது மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் ஆலோசனை தெரிவித்தார்.