நோய்த் தடுப்புப் பொருட்களின் ஏற்றுமதியில் சீனாவின் பங்கு
2021-01-14 17:10:07

சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் 14ஆம் நாள் நடத்திய செய்தியாள் கூட்டத்தில் சீன சுங்கத்துறை தலைமை பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் லீ குய்வென் கூறுகையில், புள்ளிவிவரங்களின்படி, 2020ஆம் ஆண்டு மார்ச் முதல் டிசம்பர் வரை சீன சுங்கத்துறையில் சோதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட நோய்த் தடுப்புப் பொருட்களின் மொத்த மதிப்பு 43 ஆயிரத்து 850 கோடி யுவானாகும். இவற்றில் 34 ஆயிரம் கோடி யுவான் மதிப்புள்ள 22 ஆயிரத்து 420 கோடி முகக்கவசங்கள் உள்ளன. இது, உலகளவில் வெளிநாட்டவர் ஒவ்வொருவருக்கும் 40 முகக்கவசங்கள் வழங்கப்பட்டதற்குச் சமம் என்று தெரிவித்தார். அதோடு, பாதுகாப்பு ஆடைகள் மற்றும் கண்ணாடி, அறுவை சிகிச்சை கையுறைகள் ஆகியவற்றையும் சீனா ஏற்றுமதி செய்துள்ளது. இத்தகைய பொருட்கள் தொடர்புடைய நாடுகளின் மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட நோய்த் தடுப்புப் பணியாளர்களின் தற்காப்புக்கு உத்தரவாதம் அளித்துள்ளன என்றும் அவர் கூறினார்.