சீனாவில் சரக்கு வர்த்தகம் அதிகரிப்பு
2021-01-14 17:18:55

2020ஆம் ஆண்டு சீனாவின் சரக்கு வர்த்தகத்தின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை 32 லட்சத்து 16 ஆயிரம் கோடி யுவானை எட்டியது. 2019ஆம் ஆண்டில் இருந்ததை விட இது 1.9 விழுக்காடு அதிகமாகும். புதிய ரக கரோனா வைரஸ் பரவல், ஒருதரப்புவாதம் உள்ளிட்ட பல நிர்பந்தங்களுக்கு இடையே இத்தகைய சாதனை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் சரக்கு வர்த்தகத்தில் சாதகமான வளர்ச்சியை எட்டிய ஒரே பெரிய பொருளாதார நாடாக சீனா மாறியுள்ளது. என்று சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் 14ஆம் நாள் கூறியது.

ஆசியான், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகியவை சீனாவின் முதல் ஐந்து வர்த்தக்க் கூட்டாளிகளாகும் என்று சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் லி குய்வென் கூறினார்.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகளுக்கான சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை 9 லட்சத்து 37 ஆயிரம் கோடி யுவானை எட்டி. 1 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.