உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழுவுடன் ஒத்துழைப்புக்கு சீனா விருப்பம்
2021-01-14 17:04:27

புதிய ரக கரோனா வைரஸ் தோற்ற ஆய்வுக்கான உலக சுகாதார அமைப்பின் சர்வதேச நிபுணர்கள் குழு 14ஆம் நாள் முதல் சீனாவில் பயணம் மேற்கொண்டு, சீனாவின் அறிவியலாளர்களுடன் ஒத்துழைத்து கூட்டு ஆய்வு செய்ய உள்ளது. இது குறித்து சீனாவின் பல துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கூறுகையில், உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச நிபுணர்கள் குழுவுடன் ஒத்துழைத்து, உலகளவில் புதிய ரக கரோனா வைரஸ் தோற்ற ஆய்வுக்குப் பங்காற்ற சீனா விரும்புகிறது என்று தெரிவித்தனர்.