உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் குறைந்தது 7 உருமாறிய கரோனா வைரஸ்கள்
2021-01-15 14:15:51

கடந்த 15 நாட்களாக உலகளவில் புதிய ரக கரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து மோசமாகி வருகின்றது. உலகச் சுகாதார அமைப்பு ஜனவரி 14-ஆம் நாள் வெளியிட்ட புதிய தரவுகளின்படி, உலக முழுவதும் மொத்தமாக 9 கோடியே 10இலட்சத்து 61ஆயிரத்து 72 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், மேலும், 2020ஆம் ஆண்டின் டிசம்பர் 14 -ஆம் நாள் முதல் தற்போது வரை, குறைந்தது 7 வகை உருமாறிய கரோனா வைரஸ்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில்  தனித்தனியாக 2 உருமாறிய கரோனா வகைகள் இருப்பதாகவும், தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, ஜப்பான், பிரேசில் ஆகிய நாடுகளில் முறையே ஒரு வகை இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வரை உலகளவில் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் உருமாறிய கரோனா தொற்றுகள் ஏற்பட்டுள்ளன.