பைடன் அரசுக் குழுவின் பொருளாதார ஊக்கத் திட்டம்
2021-01-15 11:32:45

கரோனா வைரசினால், அமெரிக்கக் குடும்பங்கள் மற்றும் வணிகத் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்பைச் சமாளிக்க, ‘’அமெரிக்க மீட்புத் திட்டம்’’ என்னும் பெயரில் 1 இலட்சத்து 90 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருளாதார ஊக்க திட்டத்தை அமெரிக்க அரசுத் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்ட பைடன் உள்ளூர் நேரப்படி 14ஆம் நாள் அறிவித்தார்.

அதன் படி 2020ஆம் ஆண்டில் மார்ச் திங்களில் அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிய 3 இலட்சம் கோடி மீட்பு திட்டமும் டிசம்பரில் நிறைவேற்றிய 90 ஆயிரம் கோடி மீட்பு திட்டமும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இத்திட்டம், பைடன் தன்னுடைய அரசுத் தலைவர் பதவியின் முதல் சில மாதங்களில் செயல்படுத்தும் இரண்டு முக்கிய செலவுத் திட்டங்களில் முதல் ஒன்றாகும் என்று பைடன் அரசுக் குழுவின் உயர் நிலை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

2ஆவது திட்டம் இவ்வாண்டின் பிப்ரவரியில் முன்வைக்கப்படும். அதே வேளையில், வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தில் சீர்திருத்தம் மேற்கொள்வது, காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பது, பல்வேறு தேசிய இனங்களுக்கிடையிலான சமத்துவத்தை முன்னேற்றுவது ஆகியவை முக்கியமாகத் தீர்க்கப்பட உள்ளன.