சமூக அடிப்படை வசதிகளின் கட்டுமானத்துக்கு ஆதரவளிக்கும் ஏஐஐபி
2021-01-15 11:20:43

நடப்பு ஆண்டு, ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கி நிறுவப்பட்ட 5ஆம் ஆண்டு நிறைவாகும்.  2020ஆம் ஆண்டில் புதிய ரக கரோனா வைரசின் காரணமாக உலகம் கடந்த நூறு ஆண்டுகளில் காணாத நெருக்கடியை எதிர்கொண்டது. இந்நிலையில், ஆசிய அடிப்படை வசதி முதலீடு வங்கி, தொடர்புடைய நாடுகளின் மருத்துவத் துறைக்கு குறிப்பாக, கரோனை வைரஸுக்கான அடிப்படை வசதிகளின் கட்டுமானத்துக்கு ஆதரவு அளித்து வருவதாக இவ்வங்கியின் தலைவர் ஜின் லிகுன் செய்தியாளர்களுக்குச் சிறப்புப் பேட்டி அளித்த போது தெரிவித்தார்.

2021ஆம் ஆண்டில் பெருமளவில் உற்பத்தி செய்யப்படும் கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வருவதன் காரணமாக உலகின் பல நாடுகள் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பக் கூடும். அப்போது, ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கி பாரம்பரிய பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, எதிர்காலச் சேவை அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தை உருவாக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.