சீனாவில் ஒரு கோடி பேருக்குப் போடப்பட்டுள்ள தடுப்பூசிகள்
2021-01-15 14:18:48

சீனாவின் சினோபார்ம் நிறுவனத்தால் ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசி, சீனா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், எகிப்து, ஜோர்டான் ஆகிய 5 நாடுகளில் அவசரப் பயன்பாட்டுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. அதோடு, 10 நாடுகளின் அரசுத் தலைவர்களும் தலைமையமைச்சர்களும் சி சினோபார்ம் நிறுவனத்தின் தடுப்பூசிகளைப் போட்டு கொண்டுள்ளனர். மேலும், இத்தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்ய 50க்கும் அதிகமான நாடுகள் விண்ணப்பம் செய்துள்ளன.

இதனிடையில் சீனா முழுவதும் ஒருகோடி பேருக்குச் சினோபார்ம் க் நிறுவனத்தின் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

இது குறித்து, சினோபார்ம் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் லீயூ ஜிங் ஜென் கூறுகையில், சீனாவில் ஒரு கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அதன்பின் தடுப்பூசியால் கடும் பக்க விளைவு ஏற்பட்டதாக எவ்வித அறிக்கையும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தொற்று நோயைத் தடுத்து கட்டுப்படுத்தும் போக்கில், தடுப்பூசிகளைப் போட்டு கொள்வது மிகவும் வசதியாகவும் பயன் அளிப்பதாகவும் இருக்கும் பொதுச் சுகாதார கட்டுப்பாட்டு செயலாகும் என்றும் அவர் தெரிவித்தார்.