ஷிச்சின்பிங்கின் வாழ்த்துக்கள்
2021-01-15 17:59:05

லாவோஸ் மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிசௌலித்துக்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் 15ஆம் நாள் வாழ்த்துகள் தெரிவித்தார்.

அத்துடன், லாவோஸ் மக்கள் புரட்சிக் கட்சியின் புதிய மத்திய தலைவர் குழுவுக்கும் அவர் வாழ்த்துகள் தெரிவித்தார். அவர் கூறுகையில், லாவோஸ் மக்கள் புரட்சிக் கட்சியின் தலைமையில், லாவோஸ் சோஷலிச லட்சியம் முக்கிய முன்னேற்றம் பெற்று, அரசியல் சமூகம் நிதானமாகவும், பொருளாதாரம் தொடர்ச்சியாகவும் வளர்ந்து, மக்கள் வாழ்க்கையும் தொடர்ந்து மேம்பட்டு வருகின்றது. புதிய மத்தியத் தலைவர் குழுவின் தலைமையில், லாவோஸ் சோஷலிச லட்சியம் மேலும் பெரும் சாதனைகளைப் பெறும் என்றார்.

கடந்த பல ஆண்டுகளாக, சீன-லாவோஸ் உறவு தொடர்ந்து ஆழமாக வளர்ந்து, இரு நாடுகளுக்கும் இரு நாட்டு மக்களுக்கும் நலன்களை வழங்கி வருகின்றது. புதிய காலத்தில், லாவோஸூடன் இணைந்து, சீன-லாவோஸ் பொது சமூக ஆக்கப்பணியை முன்னேற்றி, பிரதேச அமைதி மற்றும் செழிப்பான வளர்ச்சியைப் பேணிக்காப்பதற்குப் பங்காற்ற சீனா விரும்புகிறது என்றும் அவர் கூறினார்.