வூஹான் நகரில் கரோனா வைரஸ் ஆய்வு நிபுணர்கள் குழு
2021-01-15 16:43:13

புதிய ரக கரோனா வைரஸ் தொற்று குறித்து ஆய்வு மேற்கொள்ள, 13 பன்னாட்டு நிபுணர்களைக் கொண்ட உலகச் சுகாதார அமைப்பின் ஆய்வுக் குழு ஜனவரி 14-ஆம் நாள் சிங்கப்பூரிலிருந்து சீனாவின் வூ ஹான் நகரைச் சென்றடைந்தது. அவர்கள் சீனத் தரப்பினருடன் இணைந்து, கூட்டாக ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர் என்று இவ்வமைப்பின் தலைமைச் செயலாளர் தெட்ரொஸ் அன்று தெரிவித்துள்ளார்.