அமெரிக்க அரசுக்கு வேண்டுக்கோள்
2021-01-15 17:29:03

அமெரிக்க-சீன வர்த்தகக் கமிட்டி மற்றும் ஆக்ஸ்போர்டு பொருளாதார ஆய்வகம் ஜனவரி 14ஆம் நாள் வெளியிட்ட கூட்டறிக்கையில், சீனாவுடனான வர்த்தக முதலீட்டிலிருந்து அமெரிக்கா பயனடைந்துள்ளது. சீன-அமெரிக்க வர்த்தகச் சர்ச்சை அமெரிக்கப் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சீனாவின் மீதான சுங்க வரியை அமெரிக்கா குறைத்து, இரு நாட்டு மற்றும் உலகப் பொருளாதாரத்துக்கு நன்மை புரியுமாறு இவ்வறிக்கையில் அமெரிக்க அரசுக்கு வேண்டுக்கோள் விடுக்கப்பட்டது.