பொருளாதார வளர்ச்சி பற்றி ஷிச்சின்பிங்கின் முக்கியக் கட்டுரை
2021-01-15 18:42:24

பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் இடைக்கால மற்றும் நீண்டகால வளர்ச்சியிலுள்ள முக்கிய பிரச்சினைகளைச் சரியாக அறிந்து கொண்டு கையாள்வது குறித்து, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் எழுதிய கட்டுரை, ஜனவரி 16ஆம் நாள் வெளியிட உள்ள ஜியூஷி இதழில் வெளியிடப்பட உள்ளது.

புதிய வளர்ச்சிக் கட்டத்திலுள்ள புதிய வாய்ப்புகளையும் அறைகூவல்கலையும் வாதஞ்சார்ந்த சிந்தனையுடன் கையாள வேண்டும். வாய்ப்பு மற்றும் இடர்பாடு பற்றிய விழிப்புணர்வை வலுப்படுத்தி, அறிவியல் அடிப்படையில் அவற்றைக் கையாண்டு, நெருக்கடியை வாய்ப்பாக மாற்றி, உயர்தர, தொடரவல்ல மற்றும் பாதுகாப்பான வளர்ச்சியை நனவாக்கும் வகையில் பாடுபட வேண்டும் என்று இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய பொருளாதாரச் சுழற்சி தடையின்றி செயல்படச் செய்யும் அடிப்படையில் புதிய வளர்ச்சிக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அறிவியல் தொழில் நுட்பத்தின் மூலம் புதிய இயக்காற்றலைத் தூண்ட வேண்டும். சீர்திருத்தத்தை ஆழமாக்குவதன் வழியாக புதிய வளர்ச்சி ஆற்றலை ஊக்குவிக்க வேண்டும் என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.