ஆசிய நாடுகளுக்கிடையிலான தாராள வர்த்தக உறவுகளை வலுப்படுத்துதல்
2021-01-15 17:55:10

போ ஆவ் ஆசிய மன்றம் தாராள வர்த்தக உடன்படிக்கை: ஆசியாவின் தேர்வு என்ற அறிக்கையை 14ஆம் நாள் வெளியிட்டது. ஆசியாவின் முக்கிய நாடுகளுக்கிடையிலான தாராள வர்த்தக இணைப்புகள் மற்றும் உடன்படிக்கைகளின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, மேலும் பெரும் அளவிலான பிராந்திய தாராள வர்த்தக உடன்படிக்கை உருவாக்கத்தை தூண்டி, ஆசிய பிரதேச பொருளாதார ஒருங்கிணைப்புக்கு புதிய திட்டம் ஒன்றை கூட்டாக உருவாக்க வேண்டும் என்று இவ்வறிக்கையில் ஆலோசனை வைக்கப்பட்டது.

தாராள வர்த்தக உடன்படிக்கையின் விதிமுறை ஆய்வை வலுப்படுத்தி, இப்பிரதேசத்திலுள்ள நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் நலன்களை வழங்கி, சீர்திருத்தம் மூலம் வெளிநாட்டுத் திறப்பை மேம்படுத்தி, பல தரப்பு வர்த்தக அமைப்பு முறையின் சீர்திருத்தத்துக்குத் தகுந்த ஆசியத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் இதில் கூறப்பட்டுள்ளது.