பிரதேசங்களின் பன்முகப் பொருளாதாரக் கூட்டாளி உறவுக்கான உடன்படிக்கைக்கான ஒழுங்கு முறையைத் தொடங்கும் சீனா
2021-01-15 11:08:22

பிரதேசங்களின் பன்முகப் பொருளாதாரக் கூட்டாளி உறவுக்கான உடன்படிக்கையில் கையொப்பமிட்ட பிறகு, தற்போது சீனா செயல்படுத்தி வரும் ஒழுங்குமுறை முன்னேற்றத்தைச் சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் காவ் ஃபெங் 14ஆம் நாள் பெய்ஜிங்கில் அறிமுகப்படுத்தினார்.

இந்த உடன்படிக்கை தொடர்பான அங்கீகரிப்பு மற்றும் நடைமுறைப்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகளைச் சீனா ஆறு மாதங்களுக்குள் நிறைவேற்ற உள்ளது.

2020ஆம் ஆண்டின் நவம்பர் திங்களில், அதிகாரப்பூர்வமாகக் கையொப்பமிடப்பட்டுள்ள இந்த உடன்படிக்கை, உலகில் மிகப் பெரிய மக்கள் தொகை, பன்முகத்தன்மை மற்றும் உள்ளார்ந்த வளர்ச்சி ஆற்றல் ஆகியவற்றைக் கொண்ட கிழக்கு ஆசிய சுதந்திர வர்த்தகப் பிரதேசக் கட்டுமானத்தின் தொடக்கத்தைக் குறிப்பது குறிப்பிடத்தக்கது.