போ ஆவில் மூன்று முறை பயணம் மேற்கொண்டுள்ள ஷிச்சின்பிங்
2021-04-19 10:36:49

போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2021ஆம் ஆண்டுக்கூட்டம் துவங்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மூன்று முறைகளில் போவ் ஆவில் பயணம் மேற்கொண்டுள்ளார். உரை நிகழ்த்துவது, தொழில் முனைவோருடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்துவது முதலிய முறைகளில், ஆசிய மற்றும் உலகின் வளர்ச்சிக்கு சீனாவின் ஆலோசனையை முன்வைத்து, சீன வேகத்தை வழங்கி, உலகிற்கு சீனாவின் வளர்ச்சியையும், புதிய யுகத்தில் ஆசியா மற்றும் உலகிற்கு சீனா கொண்டுள்ள வந்துள்ள மேலதிக வாய்ப்பையும் அவர் விவரித்தார்.

தற்போது, அதிக அண்டை நாடுகளின் மிக பெரிய வர்த்தக கூட்டாளி, மிக பெரிய ஏற்றுமதி சந்தை மற்றும் முக்கிய முதலீட்டு ஊற்றுமூலமாக சீனா மாறியுள்ளது. 2020ஆம் ஆண்டு சீனா மற்றும் ஆசிய நாடுகளின் வர்த்தக அளவு, ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுடனான வர்த்தக அளவை விட அதிகம். சீனா கொண்டு வரும் வாய்ப்பு, இப்பிரதேசத்தின் நாடுகளின் வளர்ச்சிக்கு இயக்கு ஆற்றலை வழங்கியுள்ளது.

இவ்வாண்டு போ ஆவ் ஆசிய மன்றம் நிறுவப்பட்ட 20ஆம் ஆண்டு நிறைவாகும். புதிய வளர்ச்சி காலக் கட்டத்தில் நுழைந்து, 14ஆவது ஐந்தாண்டு திட்டத்தைத் துவக்கி வைத்துள்ள சீனா, ஆசியா மற்றும் உலகிற்கு எந்த புதிய வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கும் என்பது, அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. ஷிச்சின்பிங் கூறியதைப் போல, நாட்டின் வளர்ச்சியை நனவாக்கும் அதே வேளையில், மேலதிக நாடுகள் மற்றும் மக்களுக்கு சீனா மேலதிக நன்மைகளைக் கொண்டு வரும்.