தடுப்பூசி விநியோகத்தில் நியாயம் தேவை
2021-04-20 18:59:02

இந்திய செரம் ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மைச் செயலாளர் பூனவாலா அண்மையில் கூறுகையில், இந்தியாவின் கொவைட்-19 தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், தடுப்பூசிக்கான மூலப் பொருட்களின் மீதான ஏற்றுமதித் தடையை அமெரிக்கா நீக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

வளரும் நாடுகளில் பொது மக்கள் செலவிடக் கூடிய பொது பொருட்களாகத் தடுப்பூசியை வழங்குவது, நோய் தொற்றைச் சமாளிப்பதில் சிக்கலைச் சந்திக்கும் நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு இயன்றளவில் உதவியளிப்பது முதலியவற்றை நியாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென் பின் 20ஆம் நாள் தெரிவித்தார்.