காலநிலை பிரச்சினை பற்றிய சீன-அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை
2021-04-20 17:37:09

காலநிலை பிரச்சினை பற்றிய சீன-அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை_fororder_1111

2 நாட்கள் நீடித்த காலநிலை பிரச்சினை பற்றிய சீன-அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை நிறைவடைந்தது. இப்பேச்சுவார்த்தை பற்றிய கூட்டறிக்கையை இரு தரப்புகள் 18ஆம் நாள் வெளியிட்டன. சீன-அமெரிக்கா இடையே பதற்றமான உறவு நிலவும் போதிலும், காலநிலை மாற்றப் பிரச்சினையில் கூட்டு முயற்சி மேற்கொள்வதை இரு நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. பிற பிரச்சினைகளில் சீனா மற்றும் அமெரிக்கா இடையேயான நிலைமை இடைவிடாமல் தீவிரமடைந்து வரும் போதிலும், இது இரு நாட்டு ஒத்துழைப்புக்கு, அரிய மாதிரியாகும் என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.