சீன அரசு தலைவர்-சௌதி அரேபிய இளவரசர் தொடர்பு
2021-04-20 20:56:20

சீன அரசு தலைவர் ஷிச்சின்பிங் 20ஆம் நாள் சௌதி அரேபிய இளவரசர் முகமத் பின் சல்மனுடன் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டார். ஷிச்சின்பிங் கூறுகையில், சீனாவும் சௌதி அரேபியாவும் பன்முகக் நெடுநோக்கு கூட்டாளிகளாகும். காலநிலை மாற்றம், கொவைட்-19 நோய் தொற்று முதலியவை, மனிதர்கள் சந்தித்து வரும் பெரும் சவால்களாகும். பலதரப்புவாதக் கட்டுக்கோட்புக்குள் பன்னாட்டுச் சக்திகளுடன் இணைந்து இவற்றைச் சமாளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

முகமத் கூறுகையில், காலநிலை மாற்றச் சமாளிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து சீனாவுடன் நெடுநோக்கு ஒத்துழைப்பை வலுப்படுத்த சௌதி அரேபியா விரும்புகிறது என்று தெரிவித்தார்.