ஐ.நா பாதுகாப்பவையின் உயர் நிலை விவாதத்தில் வாங் யீ உரை
2021-04-20 14:45:44

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்பு பிரதிநிதியாக, சீன அரசவை உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ 19ஆம் நாள் இரவு ஐ.நா பாதுகாப்பு அவை “ஐ.நாவுக்கும் பிரதேசங்கள் மற்றும் துணை பிரதேசங்களின் அமைப்புகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது” குறித்த உயர் நிலை பொது விவாதத்தில் கலந்து கொண்டார்.

ஐ.நா பிரதேசங்களின் அமைப்புகளுடன் ஒத்துழைப்பு மேற்கொள்வது, ஐ.நா சாசனத்தின் தெளிவான கோரிக்கையாகவும், பலதரப்புவாதத்தின் முக்கிய வெளிப்பாட்டு வடிவமாகவும் இருக்கிறது. தற்போது சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு துறையில் அதிக அறைகூவல்கள் ஏற்பட்டுள்ளன. ஐ.நாவும், பிரதேசங்களின் அமைப்புகளும் ஒரே திசையை நோக்கி செயல்பட்டு, பலதரப்புவாதத்தைப் பேணிகாப்பதற்கும், உலக அமைதி மற்றும் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும் பங்காற்ற வேண்டும் என்று வாங் யீ தெரிவித்தார்.