போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2021ஆம் ஆண்டுக்கூட்டத்தின் துவக்க விழாவில் ஷிச்சின்பிங் உரை
2021-04-20 14:10:04

போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2021ஆம் ஆண்டுக்கூட்டத்தின் துவக்க விழாவில் ஷிச்சின்பிங் உரை_fororder_0420

போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2021ஆம் ஆண்டுக்கூட்டத்தின் துவக்க விழா 20ஆம் நாள் முற்பகல் ஹெய் நான் மாநிலத்தின் போ ஆவில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் காணொலி வழியாக உரை நிகழ்த்தினார்.

கடந்த 20 ஆண்டுகளில், ஆசிய நாடுகள் பிரதேச பொருளாதார ஒருமைப்பாட்டை ஆழமாக முன்னேற்றி, சமூக பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தி வருகின்றன. ஆசியாவைச் சேர்ந்த சீனா, சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பை இடைவிடாமல் ஆழமாக்கி, பிரதேச ஒத்துழைப்பை ஆக்கப்பூர்வமாக முன்னேற்றி, ஆசிய மற்றும் உலகின் வளர்ச்சிக்கு முக்கிய செல்வாக்கு ஏற்படுத்தியுள்ளது என்று அவர் உரையில் வலியுறுத்தினார்.

பல்வேறு நாடுகளும் சர்வதேச விவகாரங்களைக் கூட்டாகக் கலந்தாய்வு செய்து, தீர்க்க வேண்டும். உலகின் எதிர்காலமும் தலைவிதியும் அனைத்து நாடுகளாலும் கூட்டாக நிர்ணயிக்கப்பட வேண்டும். உலகத்துக்கு மேலாதிக்கத்துக்குப் பதிலாக நியாயம் வேண்டும்.  வல்லரசுகள் அதிக பொறுப்புகளை ஏற்க வேண்டும் என்றார்.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு அனைவரும் கையோடு கைகோர்த்து முயற்சி செய்யும் வளர்ச்சி பாதையாகும். ஆர்வம் கொண்ட நாடுகள், இதில் கலந்துகொண்டு, ஒத்துழைப்பு மேற்கொண்டு, நலனை பெறலாம் என்று அவர் தெரிவித்தார்.

2030ஆம் ஆண்டு வரை, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையைக் கூட்டாகக் கட்டியமைப்பதன் மூலம், உலகில் 76 இலட்சம் மக்களை தீவிர வறுமையிலிருந்தும், 3.2 கோடி மக்களை நடுநிலை வறுமையிலிருந்தும் விடுவிக்க முடியும். சீனா சகிப்புடன், பங்களிக்க விரும்பும் பல்வேறு தரப்புகளுடன் கூட்டாக முயற்சி மேற்கொண்டு, மனிதகுலம் கூட்டுச் செழுமைக்கு நோக்கி நடைபோடுவதற்கு ஆக்கப்பூர்வமான பங்கு ஆற்ற விரும்புகிறது என்று அவர் வலியுறுத்தினார்.

சமநிலை, ஒன்றுக்கு ஒன்று மதிப்பு அளிப்பது ஆகியவற்றை இரு நாட்டுறவின் முதன்மையாக கொள்ள வேண்டும். இதர நாடுகளின் உள் விவகாரத்தில் தலையீடு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. அமைதி, வளர்ச்சி, சமநிலை, நேர்மை, ஜனநாயகம், சுதந்திரம் ஆகிய மனித குலத்தின் கூட்டு மதிப்பு கருத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

வேகமாக வளர்ந்து வரும் சீனா மேலாதிக்கம், விரிவாக்கம், செல்வாக்கு மண்டலம் மற்றும் ஆயுதப் பந்தயத்தை ஒருபோதும் நாடாது. மேலும்,  உலக அமைதியை உருவாக்குதல், உலகளாவிய வளர்ச்சிக்கு பங்களித்தல், சர்வதேச ஒழுங்கை பாதுகாத்தல் ஆகிய சீனாவின் பணிகள் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.