ட்சிங்ஹுவா உலகில் முதல் தர பல்கலைக்கழகம்:ஷிச்சின்பிங் விருப்பம்
2021-04-20 17:40:51

ட்சிங்ஹுவா உலகில் முதல் தர பல்கலைக்கழகம்:ஷிச்சின்பிங் விருப்பம்_fororder_1

ட்சிங்ஹுவா உலகில் முதல் தர பல்கலைக்கழகம்:ஷிச்சின்பிங் விருப்பம்_fororder_2

ட்சிங்ஹுவா உலகில் முதல் தர பல்கலைக்கழகம்:ஷிச்சின்பிங் விருப்பம்_fororder_3

ட்சிங்ஹுவா உலகில் முதல் தர பல்கலைக்கழகம்:ஷிச்சின்பிங் விருப்பம்_fororder_4

சீனாவின் தலைசிறந்த ட்சிங்ஹுவா பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட 110ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அப்பல்கலைக்கழக முன்னாள் மாணவரான சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஏப்ரல் 19ஆம் நாள் அப்பல்கலைக்கழகத்தில் பயணம் மேற்கொண்டார். இவர் 1975 முதல் 1979ஆம் ஆண்டு வரை அங்கு கல்வி பயின்றார்.

ட்சிங்ஹுவா பல்கலைக்கழகம், பொறியியல் கல்விக்குப் புகழ் பெற்ற ஒட்டுமொத்த பல்கலைக்கழகமாகும். உலகின் உயர்நிலை கல்வி ஆய்வு நிறுவனம் ஒன்று கடந்த ஆண்டில் வெளியிட்ட உலகளாவிய பல்கலைக்கழக வரிசையில், ட்சிங்ஹுவா பல்கலைக்கழகம் 15ஆவது இடம் பிடித்தது.

இப்பயணத்தில் ஷிச்சின்பிங் கூறுகையில், சீனா கட்டியமைத்துள்ள முதல் தர பல்கலைக்கழகங்களுள் சிறப்பு வாய்ந்த சோஷலிச முதல் தர பல்கலைக்கழகம் இதுவாகும் என்று குறிப்பிட்டார்.