சீன ஊடகக் குழுமத்தின் முதலாவது வெளிநாட்டுக் காணொளி விழா
2021-04-21 10:02:52

சீன ஊடகக் குழுமத்தின் முதலாவது வெளிநாட்டுக் காணொளி விழா_fororder_1618663669221_568_1920x1080

2021ஆம் ஆண்டு ஐ.நாவின் சீன மொழி நாளுக்கான நிகழ்ச்சி மற்றும் சீன ஊடகக் குழுமத்தின் முதலாவது வெளிநாட்டுக் காணொளி விழா ஏப்ரல் 20ஆம் நாள் ஜெனீவாவில் வெற்றிக்கரமாக நடைபெற்றது.

சீன ஊடகக் குழுமத்தின் இந்தக் காணொலி விழா, நடப்பு சீன மொழி தினத்தையொட்டி நடத்தப்பட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். இதற்காக, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், ஜப்பான் உள்ளிட்ட 27 நாடுகளைச் சேர்ந்தவர்கள் சீன மொழி மூலம் தயாரித்த 340 காணொளிகள் சேகரிக்கப்பட்டன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணைத் தலைவரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹாய்சியூங், இவ்விழாவில் பரிசு பெற்ற மக்களுக்கும், கலந்து கொண்ட மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

ஐ.நாவின் சீன மொழி தினத்துக்கான நிகழ்ச்சி 2010ஆம் ஆண்டு நடைபெறத் துவங்கியது. தற்போது, சீனப் பண்பாடுகளை உலக மக்கள் அறிந்து கொள்ளும் முக்கிய ஜன்னலாக, ஐ.நாவின் சீன மொழி நாள் நிகழ்ச்சி மாறியுள்ளது.