போ ஆவ் ஆசிய மன்றம் ஆசியாவின் நீண்ட கால வளர்ச்சிக்குப் பங்காற்றும்-வாங் ச்சி சான்
2021-04-21 10:21:34

சீனத் துணை அரசுத் தலைவர் வாங் ச்சி சான் 20ஆம் நாள் போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2021ஆம் ஆண்டுக் கூட்டத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு, மன்றத்தின் ஆளுநர்களையும் நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளிகளையும் வரவேற்று உரை நிகழ்த்தி,  சீன மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கடந்த 20 ஆண்டுகளாக, போ ஆவ் ஆசிய மன்றமானது, அரசியல், வர்த்தகம், கல்வி ஆகிய பல்வேறு துறைகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையை வலுப்படுத்தி, ஒத்துழைப்புக்கு வாய்ப்பை உருவாக்கும் உயர் நிலை மேடையாக மாறியுள்ளது. ஆசிய வளர்ச்சிக்கும், ஆசியா உலகம் இடையேயான பரிமாற்றத்துக்கும் அது முக்கிய பங்காற்றியுள்ளது என்று வாங் ச்சி சான் கூறினார். மேலும், இம்மன்றத்தின் மூலம் ஆகிய ஞானம் உள்ளடக்கிய கருத்துக்களை அதிகமாக உருவாக்கி, ஆசியாவின் நீண்டகால வளர்ச்சி மற்றும் செழுமைக்குச் சிறந்த திட்டத்தை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.