சீன-அமெரிக்க உறவு பற்றிய சீனத் துணை வெளியுறவு அமைச்சரின் கருத்து
2021-04-21 15:40:38

சீனத் துணை வெளியுறவு அமைச்சர் லெ யூச்செங் ஏப்ரல் 16ஆம் நாள் அமெரிக்கக் கூட்டுச் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், சீன-அமெரிக்க உறவிலுள்ள போட்டி மற்றும் எதிர்ப்பு அம்சங்களில் மட்டுமே அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாகவும், இந்தச் செயல் எதிர்மறையான ஒன்று என்றும் தெரிவித்தார். மேலும், சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான போட்டி, சீரான போட்டியாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், உலகத்துக்குச் சிறப்பான பொறுப்பேற்கும் இரு பெரிய நாடுகளாக, சீனாவும் அமெரிக்காவும் ஒத்துழைப்புகளை விரிவாக்க வேண்டும் என்றும் இரு நாடுகளும் ஒத்துழைப்புகளிலிருந்து நலனைப் பெறலாம் என்றும் குறிப்பிட்டார்.