தலைவர்களின் உச்சி மாநாட்டில் ஷிச்சின்பிங் பங்கெடுப்பு
2021-04-21 18:58:28

அமெரிக்க அரசுத் தலைவர் பைடெனின் அழைப்பின் பேரில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஏப்ரல் 22ஆம் நாள் காணொளி வழியில் காலநிலை பற்றிய தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்த உள்ளார்.

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 21ஆம் நாள் கூறுகையில், இந்த உச்சிமாநாடு, காலநிலை மாற்றத்தையும் அறைகூவல்களையும் சமாளிக்கவும், உலக காலநிலை மற்றும் சுற்றுச்சூழலின் மேம்பாட்டைக் கூட்டாக விரைவுப்படுத்தவும் பயனுள்ள பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு மேடையையும் வழங்கும் என்று சீனா எதிர்பார்ப்பு கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.