ஷிச்சின்பிங்குடன் சந்திப்பு: சீன அரசுத் தலைவர் விவசாயியாக இருந்தவர் என்பதை அறிந்து வியந்த வெளிநாட்டவர்கள்
2021-09-22 16:15:02

கோஸ்ட்டா ரிக்காவிலுள்ள காப்பி தோட்ட உரிமையாளர் மார்கோ டுரியோ சாமோரா சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பற்றிக் கூறுகையில், அவர் ஒரு விவசாயி என்று பெரும் ஆர்வத்துடனும் பெருமையுடனும் ஒரு தலைவர் கூறுவது மிகவும் அரியது. அது மட்டுமல்ல, கோஸ்ட்டா ரிக்காவில் பல வெளிநாட்டுத் தலைவர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். ஆனால்,  எங்களைப் போன்ற சாதாரண குடும்பத்திற்கு வந்து பார்வையிட்ட வெளிநாட்டுத் தலைவரை நான் கிட்டத்தட்ட பார்த்ததில்லை. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அலுவலகத்தில் மட்டுமல்லாமல், தொழிற்சாலை, பள்ளிகள், கிராமங்களிலும் அடிக்கடி ஆய்வுப் பயணம் மேற்கொள்ளும் நாட்டுத் தலைவராக விளங்கி வருகிறார். அவர் உண்மையான கவனம் செலுத்தும் அம்சங்கள் குறித்து நாங்கள் அறிந்து கொள்ள முடியும். அதோடு, வறுமை ஒழிப்பில் அவரின் பங்களிப்பையும் காண முடியும் என்று சாமோரா கூறினார்.