மனித உரிமைகள் பற்றிய சீனாவின் கருத்துக்கள்
2021-09-23 14:38:06

இவ்வாண்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட 100ஆவது ஆண்டு நிறைவாகும். மக்களை முதன்மையாக வைப்பதிலும், அவர்களின் பன்முக வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து ஊன்றி நின்று வருகின்றது. அதோடு, சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த மனித உரிமை வளர்ச்சிப் பாதையைச் சீனா வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது என்று செப்டம்பர் 22ஆம் நாள் ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி சென் சூ, ஐ.நா.வின் மனித உரிமை மன்றத்தின் 48ஆவது கூட்டத்தில் தெரிவித்தார்.பல்வேறு நாடுகளுடன் கையோடு கை கோர்த்து, மனித உரிமையைக் கூட்டாக மேம்படுத்தி பாதுகாத்து, மனித குலத்துக்கான பொது எதிர்காலத்தை உருவாக்கி முன்னேற்ற சீனா விரும்புவதாகவும் சென் சூ தெரிவித்தார்.