2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே அமெரிக்காவில் கோவிட்-19 பரவலுக்கான சாத்தியம் அதிகம் : ஆய்வு முடிவு
2021-09-23 17:11:42

2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே அமெரிக்காவில் கோவிட்-19 பரவலுக்கான சாத்தியம் அதிகம் : ஆய்வு முடிவு_fororder_தோற்ற ஆய்வு

அமெரிக்காவில் கிட்டத்தட்ட 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு முன்பு அல்லது பின்பு கோவிட்-19 நோய்தொற்று பரவியதற்காகு சாத்தியம் அதிகம் என்று  சமீபத்தில் வெளியான ஆய்வு  அறிக்கை ஒன்றில், தெரிய வந்துள்ளது. பெருந்தரவுகளின் அடிப்படையில் மாதிரியை உருவாக்கி, கோவிட்-19 தொற்று ஏற்பட்ட தேதிகளை ஆய்வு செய்ததில் இருந்து கிடைத்த ஆய்வு முடிவை, “ChinaXiv” எனும் ஆய்வுக் கட்டுரைகளின் வெளியீட்டு தளம் 22ஆம் நாளன்று வெளியிட்டது.

வைரஸ் தோற்ற ஆய்வு,  நோய் தொற்றுக்கான தடுப்புக்கு மிகவும் முக்கியமானது. சீனாவில் கோவிட்-19 பரவல் நிகழ்ந்த முன்பே, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளில் கோவிட்-19 வோய் தோன்றியதற்கு அறிகுறிகள் உள்ளன என்று முந்தைய பல ஆய்வுகளில் வெளிகாட்டப்பட்டுள்ளன.

மேலும், அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள 12 மாநிலங்களில்  50 சதவீத சாத்தியத்துடன் கூடிய முதலாவது கோவிட்-19 பாதிப்புகளில் அதிகமானது, 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதம் வரையே இருந்தது. அந்த காலவரம்பில், ரோட் தீவு மாநிலத்தில் மிக முன்னதாகவே 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் நாள் கோவிட்-19 தொற்று ஏற்பட்டது. டெலாவேர் மாநிலத்தின் முதலாவது பாதிப்பு, 2019ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் நாள் உறுதி செய்யப்பட்டது. முதலாவது கோவிட்-19 நோயாளியை அமெரிக்க அரசாங்கம் உறுதி செய்ததன் தேதியான 2020ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் நாளை விட, இவை எல்லாம் முன்னதாகவே இருந்தன. தரவுகளின் படி, அமெரிக்காவின் கோவிட்-19 நோய் தொற்று கிட்டத்தட்ட 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு முன்பு அல்லது பின்பு பரவியுள்ளது குறிப்பிடதக்கது.