தொற்று நோய் தடுப்பில் சீனாவின் பங்களிப்பு
2021-09-23 18:40:22

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவ் லிஜியன் 23ஆம் நாள் கூறுகையில், இது வரை, 100க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு 120 கோடி தடுப்பூசிகளை சீனா வழங்கியுள்ளது. 150க்கும் அதிகமான நாடுகளுக்கும், 14 சர்வதேச அமைப்புகளுக்கும் தொற்றுநோய் எதிர்ப்பு பொருட்களை வழங்கியுள்ளது என்றார்.

தொற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்தும் வரை, தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் சீனா சர்வதேச ஒத்துழைப்பை மேற்கொள்ளும். சீனாவின் முயற்சிகள் மற்றும் பங்களிப்புகள் தொடரும் என்றும் அவர் கூறினார்.