ஐ.நா பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு வாங்யீ முன்மொழிவு
2021-09-23 18:48:45

ஐ.நா பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், ஐ.நா தலைமைச் செயலாளருடனான சந்திப்பில், சீன அரசவை உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, செப்டம்பர் 23ஆம் நாள் காணொளி மூலம் பங்கெடுத்தார்.

வாங்யீ கூறுகையில், தற்போது உலகத்தில் உறுதியற்ற தன்மை மற்றும் நிலையற்ற தன்மை அதிகம் காணப்படுகின்றது. ஐ.நா பாதுகாப்பு அவையின் 5 நிரந்தர உறுப்பு நாடுகளின் மீது சர்வதேசச் சமூகம் அதிக எதிர்பார்ப்பு கொள்கிறது என்றார்.

மேலும், அவர் 4 முன்மொழிவுகளை வழங்கினார். முதலாவதாக, உலக அமைதியைப் பேணிக்காப்பதற்கு 5 உறுப்பு நாடுகள் பொறுப்பேற்க வேண்டும். இரண்டாவதாக, பலதரப்புவாதத்தைச் செயல்படுத்துவதற்கு 5 உறுப்பு நாடுகள் பொறுப்பேற்க வேண்டும். மூன்றாவதாக, கரோனா வைரஸ் பரவலை உலகம் ஒற்றுமையுடன் தடுப்பதை 5 உறுப்பு நாடுகள் முன்னேற்ற வேண்டும். நான்காவதாக, உலக நாடுகளின் ஒத்துழைப்பை முன்னேற்றுவதற்கு 5 உறுப்பு நாடுகள் துணை புரிய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.