ஆப்கான் பிரச்சினை: ஜி20வின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்
2021-09-23 17:21:17

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ 23ஆம் நாள் ஆப்கான் பிரச்சினை பற்றிய ஜி20 அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் காணொளி கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.

சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பின் முக்கிய மேடையான ஜி20, ஆப்கான் அமைதியான வளர்ச்சிப் பாதைக்குத் திரும்ப ஆக்கப்பூர்வப் பங்காற்ற வேண்டும் என்று வாங் யீ கூறினார்.

மனிதாபிமான உதவிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். பொருளாதார தடைகளை நிறுத்த வேண்டும். பரந்த மற்றும் உள்ளடக்கிய அரசியல் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். தீபயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை ஆழமாக்க வேண்டும். அகதிகள் பிரச்சினைகளை சரியாகக் கையாள வேண்டும். பல்வேறு இயங்குமுறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு பயனிளக்க வேண்டும் என்று வாங் யீ கூறினார்.

சிறந்த எதிர்காலத்தை ஆப்கான் பொறுவதற்கு ஆதரவு மற்றும் உதவி வழங்கும் வகையில், சர்வதேச சமூகத்துடன் இணைந்து பாடுபட சீனா விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.