இனிவெறியை எதிர்க்கும் ஐ.நா.பொது பேரவையின் உயர்நிலை கூட்டம்
2021-09-23 15:00:20

டர்பன் அறிக்கையும் அதன் செயல்பாட்டு திட்டமும் ஏற்றுக்கொள்ளப்பட்ட 20ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஐ.நா. பொது பேரவையின் உயர் நிலை கூட்டம் செப்டம்பர் 22-ஆம் நாள் நடைபெற்றது. இதில், சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ காணொலி வழியாக உரைநிகழ்த்தியபோது, டர்பன் அறிக்கையும் அதன் செயல்பாட்டு திட்டமும், உலகளவில் இனவெறியை எதிர்க்கும் பொருட்டு ஏற்றப்பட்ட கொடியாகும் என்றும்,  இது, பல்வேறு நாடுகள் அளித்துள்ள பொது வாக்குறுதியும் ஆகும்  என்றார்.

மேலும், பல்வேறு நாடுகளும் இனவெறி செயல்களை ஒடுக்கும் சட்ட அமைப்புமுறையை முழுமைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய வாங்யீ,  வேறுபட்ட இனங்களுக்கிடையிலும் பண்பாடுகளுக்கிடையிலும் உள்ள பரிமாற்றங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.