செயற்கையாக மாச்சத்தை தயாரிக்கும் புதிய தொழில் நுட்பம் வெற்றி
2021-09-24 15:59:50

பல ஆண்டுகால முயற்சியுடன், செயற்கை முறையில் மாச்சத்தை தயாரிப்பது பற்றிய ஆய்வில் சீனா முக்கிய முன்னேற்றம் பெற்றுள்ளது. உலகளவில், கார்பன் டை ஆக்சைடிலிருந்து முழுமையாக மாச்சத்தை தயாரிப்பதில் முதன்முறையாக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

செயற்கை முறையில் கார்பன் டை ஆக்சைடிலிருந்து  மாச்சத்து தயாரிப்பது பற்றிய ஆய்வானது, உலகில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய தொழிலாகும் என்று சர்வதேச அறிவியல் துறையில் கருதப்படுகின்றது.

இந்த ஆய்வுச் சாதனை செப்டம்பர் 24-ஆம் நாளில் அறிவியல் எனும் சர்வதேசக் கல்விசார் இதழில் வெளியடப்பட்டுள்ளது.