சின்ஜியாங்கில் வறுமை ஒழிப்பு மற்றும் வேலை காப்புறுதிப் பணிகள்
2021-09-24 10:48:23

சீனாவின் சிறுபான்மை இனத்தவர்களின் பிரதிநிதிகள், செப்டம்பர் திங்கள் 22ஆம் நாள், ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தின் 48ஆவது கூட்டத்தொடரில் உரைநிகழ்த்தினர். சொந்த அனுபவங்களின் அடிப்படையில், அவர்கள் சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் வறுமை ஒழிப்புச் சாதனை மற்றும் வேலை காப்புறுதி தொடர்பாக அறிமுகப்படுத்தினர். ஒவ்வொரு குடும்பத்துக்கும் நிதானமான வருமானம் கிடைத்து, இன்பாக வாழ்ந்து வருவதாகப் பிரதிநிதிகளுள் ஒருவரான சின்ஜியாங்கின் தஜிக் இனத்தவரான கல்மான் தெரிவித்தார்.

நிறுவனம் ஒன்றில் நல்ல வேலை பெறும் தான், ஓய்வு நேரம், மத நம்பிக்கையுடன் நல்ல தங்குமிட வசதியையும் அனுபவித்து வருவதாக அக்சு மாவட்டத்தின் உய்கூர் இனத்தவரான துல்சுன் தெரிவித்தார்.