திபெத்தில் விவசாயிகளின் அறுவடை திருவிழா கொண்டாட்டம்
2021-09-24 16:04:12

திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் லாசாவைச் சேர்ந்த மாய்ஜோகுங்கர் மாவட்டத்தில், சீன விவசாயிகளின் அறுவடை திருவிழா கொண்டாட்டம் 23ஆம் நாள் நடைபெற்றது. உள்ளூர் விவசாயிகளும் ஆயர்களும் ஒன்றுகூடி, இனிப்பு தேநீரை அருந்தி, திபெத் நாடகத்தைக் கண்டு ரசித்து, வேளாண் பொருட்களின் விற்பனை அரங்குகளைப் பார்வையிட்டனர்.

திபெத்தில் சீன விவசாயிகளின் அறுவடை திருவிழா கொண்டாட்டம் தொடர்ந்து 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. திபெத்தின் வேளாண் உற்பத்தி மற்றும் வளர்ச்சிச் சாதனைகளும் உள்ளூர் விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வாழ்க்கை மேம்பாடும் இக்கொண்டாட்டத்தின் மூலம் வெளிக்காட்டப்பட்டுள்ளன.

திபெத் வேளாண்மை மற்றும் ஊரக விவகாரப் பணியகத்தின் துணைத் தலைவர் கூறுகையில், 13ஆவது ஐந்தாண்டு காலத்தில் திபெத்தின் கிராமப்புற லட்சியம் விறுவிறுப்பாக வளர்ந்து வந்துள்ளது. மேலும், 2020ஆம் ஆண்டு திபெத்தில் கிராமவாசிகளின் தனிநபர் வரி போக வருமானம் சராசரியாக 14 ஆயிரத்து 598 யுவானை எட்டி, தொடர்ந்து 18 ஆண்டுகளாக 10 விழுக்காட்டுக்கு மேலான அதிகரிப்பை நிலைநிறுத்தியுள்ளது என்று அறிமுகம் செய்தார்.