• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மனிதகுலத்தின் வளர்ச்சியில் சீனாவின் பங்கு பற்றி ஐ.நா வளர்ச்சித் திட்ட அலுவலகத்தின் பாராட்டு
  2017-03-23 09:06:32  cri எழுத்தின் அளவு:  A A A   
21ஆம் நாள், ஐ.நா வளர்ச்சித் திட்ட அலுவலகம் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில், மனிகுலத்தின் வளர்ச்சி அனைத்து மக்களுக்கும் உதவி என்ற தலைப்பிலான 2016ஆம் ஆண்டு மனிதகுல வளரச்சி அறிக்கையை வெளியிட்டது. இந்த அலுவலகத்தின் தலைவர் ஹெலன் கிளர்க் அன்று ஸ்டாக்ஹோமில் சின்ஹுவா செய்தி நிறுவனத்தின் செய்தியாளருக்குப் பேட்டியளித்தார். அவர் பேசுகையில், மனித்தகுலத்தின் வளர்ச்சியை முன்னேற்றுவதில் சீனா மாபெரும் பங்கு ஆற்றியுள்ளது. உலகிற்கு சீனா ஆற்றிய பங்கு விலைமதிப்பிட முடியாதது என்று கூறினார்.

புத்தாயிரமாண்டுக்கான ஐ.நாவின் வளர்ச்சி இலக்கை நனவாக்கும் முன்னேற்றப் போக்கில், சீனாவின் வறுமை ஒழிப்புப் பணி மிகவும் சிறப்பாக இருக்கிறது. இப்பணியில் சீனாவின் சாதனைகள் உலகின் பார்வையை ஈர்த்துள்ளன. வேகம் விரைவாக இருக்கிறது என்று அவர் கூறினார்.

ஐ.நா வளர்ச்சித் திட்ட அலுவலகம், சீனாவுடன் மேலும் நெருங்கிய ஒத்துழைப்பை மேற்கொள்ளும். இதன் மூலம், இரு தரப்பும் கூட்டு அக்கறை கொண்ட துறைகளில் மேலதிக சாதனைகள் பெறப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040