• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-அமெரிக்க உறவு பற்றி சீனாவின் கருத்து
  2017-03-23 10:46:00  cri எழுத்தின் அளவு:  A A A   
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் சீனாவில் பயணம் மேற்கொண்ட போது, சீனாவும் அமெரிக்காவும், ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்து, ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றி பெறுவது என்ற எழுச்சியுடன், புதிய துவக்கத்தை வளர்க்கும் இரு தரப்புறவில் தெளிவான பொது கருத்தை எட்டியுள்ளன. இரண்டு முக்கிய பெரிய நாடுகளான சீனா மற்றும் அமெரிக்கா சரியான முறையில் பகிரும் பாதை இதுவாகும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவாசுன்யீங் அம்மையார் 22ஆம் நாள் தெரிவித்தார்.

அவர் பேசுகையில், சீனா அமெரிக்காவுடன் இணைந்து, பரிமாற்றைத்தை மேலும் வலுப்படுத்தி, புரிந்துணர்வை ஆழமாக்கி, ஒன்றுக்கு மற்றதன் நம்பிக்கையை அதிகரித்து, கருத்துவேற்றுமையை உரியமுறையில் கையாளும். இரு தரப்பும் பிரதேசம் மற்றும் சர்வதேச நிலைமையில், இரு தரப்பின் ஒத்துழைப்பை இடைவிடாமல் விரிவாக்கி, இரு நாட்டுறவின் புதிய துவக்கத்தில் மேலதிக வளர்ச்சியைப் பெறுவதை முன்னேற்ற சீனா விரும்புவதாக ஹுவாசுன்யீங் தெரிவித்தார்.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040