• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன, ஆஸ்திரேஸிய தலைமையமைச்சர்களின் ஆண்டு சந்திப்பு
  2017-03-24 16:41:38  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங்கும் ஆஸ்திரேலியத் தலைமையமைச்சர் மால்கம் டர்ன்புல்லும் 24ஆம் நாள் முற்பகல் இரு நாட்டுத் தலையமைச்சர்களின் 5ஆவது சுற்று ஆண்டு சந்திப்பு நடத்தினர்.

இவ்வாண்டு இரு நாட்டுத் தூதாண்மை உறவு நிறுவப்பட்டதன் 45ஆம் ஆண்டு நிறைவாகும். இரு நாட்டுறவின் வளர்ச்சி புதிய காலக் கட்டத்தில் நுழைந்துள்ளது. தற்போது சர்வதேச மற்றும் பிரதேச நிலைமை சிக்கலாக இருக்கும் பின்னணியில், இரு நாடுகளும் பரந்துபட்ட பொது நலன்களைக் கொண்டுள்ளன என்று லீ கெச்சியாங் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவுடன் இணைந்து, ஒன்றுக்கொன்று நம்பிக்கையை அதிகரித்து, பொருளாதாரம், வர்த்தகம், மானிடப் பண்பாட்டியல், சட்ட அமலாக்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்புகளை வலுப்படுத்த சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

சீனாவும், ஆஸ்திரேலியாவும் இப்பிரதேசத்தில் உள்ள முக்கிய நாடுகளாகும். இவ்விரு நாடுகள் சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினைகளிலான தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் லீ கெச்சியாங் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா, சீனாவின் நீண்டகால நம்பகமான கூட்டாளியாகும். இரு நாட்டுப் பொருளாதாரத் துறையில் ஒன்றிடம் இல்லாதவற்றை மற்றது நிறைவு செய்யும் வாய்ப்பு அதிகம் என்றும், சீனாவுடன் இணைந்து பரிமாற்றத்தை அதிகரித்து, நட்புறவை ஆழமாக்கி, ஒத்துழைப்பை விரிவாக்க விரும்புவதாக மால்கம் டர்ன்புல் தெரிவித்தார்.(மீனா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040