• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பட்டுப்பாதை பொருளாதார மண்டல ஒத்துழைப்பு வளர்ச்சி கருத்தரங்கு
  2017-04-26 08:58:07  cri எழுத்தின் அளவு:  A A A   
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுமானத்தை ஐரோப்பிய-ஆசிய பொருளாதார ஒன்றியத்துடன் இணைப்பதை முன்னேற்றும் வகையில், பட்டுப்பாதை பொருளாதார மண்டல ஒத்துழைப்பு வளர்ச்சி கருத்தரங்கு 25ஆம் நாள் கிர்கிஸ்தானின் தலைநகர் பிஷ்கேக்கில் நடைபெற்றது.

ஐரோப்பிய-ஆசிய பொருளாதார ஒன்றியத்தின் 5 உறுப்பு நாடுகளும், பட்டுப்பாதையின் நெடுகிலுள்ள பல்வேறு நாடுகளின் வணிக மற்றும் தொழில் துறை தலைவர்கள், சீனா மற்றும் கிர்கிஸ்தானின் தொழில் துறை பிரதிநிதிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரும் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர். அடிப்படை வசதிகளின் கட்டுமானம், முதலீடு, ஏற்றுமதி ஆகிய துறைகளிலான ஒத்துழைப்புகள், நிதி ஆதரவு அமைப்பு முறையின் உருவாக்கம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து அவர்கள் விவாதம் நடத்தினர்.

மேலும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுமானம் ஐரோப்பிய-ஆசிய பொருளாதார ஒன்றியத்துடன் இணையும் ஒத்துழைப்பை முன்னேற்றும் அறிக்கை ஒன்று இக்கருத்தரங்கில் வெளியிடப்பட்டது.(வான்மதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040