• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜி20 அமைப்பின் ஹம்பெர்க் உச்சி மாநாடு பற்றி வாங் யீ கருத்து
  2017-04-27 09:37:49  cri எழுத்தின் அளவு:  A A A   
ஜி20 அமைப்பின் ஹம்பெர்க் உச்சி மாநாடு அதன் ஹாங்சோ உச்சி மாநாட்டுடன் இணைந்து, உலகப் பொருளாதாரத்தின் வலுவான அதிகரிப்பை முன்னேற்றும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ 26ஆம் நாள் பெர்லினில் தெரிவித்தார். ஜெர்மனி துணைத் தலைமை அமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான சீக்மார் காப்ரியேலுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் இவ்வாறு கூறினார்.

ஹம்பெர்க் உச்சி மாநாடு ஜெர்மனியின் ஏற்பாட்டில் நடைபெறும் போது சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் அது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜெர்மனியின் பன்முக நெடுநோக்கு கூட்டாளியான சீனா, இவ்வுச்சி மாநாட்டை செவ்வனே நடத்துவதில் ஜெர்மனிக்கு முழுமூச்சுடன் ஆதரவளிக்கிறது என்று வாங் யீ தெரிவித்தார்.(வான்மதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040