• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பொருளாதாரத் தலைவருடன் லீக்கெச்சியாங் சந்திப்பு
  2017-06-27 09:01:26  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தலைமை அமைச்சர் லீக்கெச்சியாங் சீனாவில் 2017 கோடைக்காலத் தாவோஸ் கருத்தரங்கில் பங்கேற்க வந்துள்ள உலகப் பொருளாதார மன்றத் தலைவர் கரோஸ் ஸ்வாப் உள்ளிட்ட விருந்தினர்களை 26ஆம் நாள் மாலை தாலியன் நகரில் சந்தித்துரையாடினார்.

சீனாவுடனான உலகப் பொருளாதார மன்றத்தின் ஒத்துழைப்புகளை லீக்கெச்சியாங் ஆக்கப்பூர்வமாக மதிப்பிட்டார். 4ஆவது தொழிற்துறை புரட்சியில் அனைத்தையும் உள்ளடக்கும் தன்மையுடைய வளர்ச்சி என்பது நடப்புக் கருத்தரங்கின் தலைப்பாகும். இது நடைமுறை முக்கியத்துவம் வாய்ந்தது. உலகப் பொருளாதாரம் மீட்சி பெறுவதற்குப் பல்வேறு நாடுகளின் கூட்டு முயற்சி தேவை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

சீன அரசின் தொடர்புடைய கொள்கைகளை ஸ்வாப் வெகுவாகப் பாராட்டினார். சீனாவுடன் இணைந்து உலகப் பொருளாதாரத்தின் தொடரவல்ல வளர்ச்சிக்குப் பங்காற்ற உலகப் பொருளாதார மன்றம் விரும்புவதாக ஸ்வாப் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040