• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரின் ஈராக் பயணம்
  2017-08-22 18:12:51  cri எழுத்தின் அளவு:  A A A   
ஈராக் அரசு அதிகாரிகளுடன் ஐஎஸ் அமைப்பை ஒடுக்கும் புதிய நிலைமை பற்றி விவாதிக்கும் வகையில், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மாத்திஸ் 22ஆம் நாள் ஈராக்கிற்குச் சென்றார். மாத்திஸ் அவரது பிரதிநிதிக் குழுவினருடன் 22ஆம் நாள் முற்பகல் பாக்தாத் சென்றடைந்தார். ஈராக் தலைமை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அதற்குப் பிறகு குர்திஷ் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகருக்குச் சென்று, அப்பிரதேசத்தின் தலைவரை அவர் சந்திக்க உள்ளார். இதற்கு முன் ஜோர்டான் நாட்டில் மாத்திஸ் செய்தி ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கையில், ஈராக்கிலுள்ள ஐஎஸ் அமைப்பை ஒடுக்கி, ஈராக்கின் உரிமை பிரதேச ஒருமைப்பாட்டை மீட்பதில் பல்வேறு தரப்புகள் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.(வான்மதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040