• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத் மொழி தேடுபொறியின் முதலாவது ஆண்டு நிறைவு
  2017-08-23 16:54:32  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆகஸ்ட் 22ஆம் நாள், சிங்காய் மாநிலத்தின் திபெத் மொழி தேடுபொறி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்ற நாளாகும். இதுவரை யோங்சின் எனும் இந்த தேடுபொறி பயன்படுத்தப்பட்ட முறைகள் 12 கோடியைத் தாண்டியுள்ளது. இதன் செல்லிடப்பேசி செயலி 2 லட்சத்து 10 ஆயிரம் முறைகளில் தரவிறக்கம் செய்யப்பட்டது.

திபெத் மொழியில் யோங்சின் என்பதற்கு, ஆசிரியர் மற்றும் எடுப்பது என்று பொருள். சீனாவில் மட்டுமல்ல, பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து, இந்தியா உள்ளிட்ட 66 நாடுகள் மற்றும் பிரதேசங்களிலும் இந்த தேடுபொறி பரவல் செய்யப்பட்டுள்ளது.

யோங்சின் தேடுபொறியில், செய்தி, வலைப்பக்கம், படம், காணொளி, கலைக்களஞ்சியம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் அனைத்தும் உருவாக்கப்பட்டுள்ளன. அதன் மூன்றாவது கட்டக் கட்டுமானத்தில், பின்னூட்டம், இணைய அகராதி முதலியவை அடங்கும்.(வான்மதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040