• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகத்திற்கு லீகெச்சியாங் பயணம்
  2017-08-23 18:43:40  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனத் தலைமை அமைச்சர் லீகெச்சியாங் 22ஆம் நாள் அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகத்தில் பயணம் மேற்கொண்டு, கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தினார்.

தீப்பந்தம் எனும் உயர் தொழில் நுட்ப வளர்ச்சி மையத்தில், தேசிய புதிய உயர் தொழில் நுட்ப மண்டலம் மற்றும் தற்சார்பு புத்தாக்க முன்மாதிரி மண்டலத்தின் கட்டுமானம், தொழில் நிறுவனங்களின் ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான ஆதரவு கொள்கைகளின் நடைமுறையாக்கம் முதலியவை பற்றி லீகெச்சியாங் கேட்டறிந்தார்.

அதற்குப் பிறகு நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில், அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் பொறுப்பாளர் லீகெச்சியாங்கிடம் பணியறிக்கை வழங்கினார். இத்துறைகளின் ஊழியர்களும் பணியாளர்களும் மேற்கொண்டுள்ள பயனுள்ள பணிகளை லீகெச்சியாங் பாராட்டினார்.

மேலும், பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கத்தின் தலைமைப் பங்கினை சீராக வெளிகொணர்ந்து, சீனப் பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சியை முன்னேற்றி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாட்டின் துவக்கத்தை வரவேற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.(வான்மதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040