சீனா மீது பழி கூறி, தன் பொறுப்பை தட்டிக்கழிக்கும் அமெரிக்க அரசியல்வாதிகள்

மதியழகன் 2020-03-31 19:07:29
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கடந்த சில நாட்களில், அமெரிக்காவின் அரசியல்வாதிகள் பலர், உள்நாட்டில் கொவைட்-19 நோயைச் சமாளிப்பதில் திறமையற்ற தங்கள நடவடிக்கைகளுக்கு சாக்குபோக்குகளை சொல்லிக் கொண்டு, சீனா நோய் நிலையை மறைந்துள்ளதாக பழிக்கூறி, தனது பொறுப்பில் இருந்து தப்பிக்க முயன்று வருகின்றனர்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழித்து, சீனா மீது பழி கூறுவது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் பேசுகையில்,

நோயை எதிர்கொள்ளும் போது, அவதூறு பரப்புதல், பொறுப்பை தட்டிக்கழித்தல் ஆகியவை, நேரத்தை வீணடிப்பதோடு பெரும் இழப்பையும் ஏற்படுத்தி விடும். பல்வேறு நாடுகள், ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, கூடிவிரைவில் நோயை தோற்கடிக்க வேண்டும் என்று ஹுவா சுன்யீங் தெரிவித்தார்.

ஹுவா சுன்யீங் மேலும் கூறியதாவது

மார்ச் 3ஆம் தேதி முதல், அமெரிக்காவுடன் தொடர்புடைய தகவல்களை சீனா அதிகாரப்பூர்வ முறையில் பகிர்ந்து கொண்டது. மார்ச் 7ஆம் நாள், அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையமும், சீனாவிலுள்ள அமெரிக்க தூதரகமும், வுஹானுக்கு செல்லும் சுற்றுலா முன்னெச்சரிக்கையை விடுத்தன. மார்ச் 25ஆம் நாள், வுஹானிலுள்ள அமெரிக்க துணை நிலை தூதரகம் மூடப்பட்டது.

ஆனால், பல நாட்களுக்கு பிறகு, அமெரிக்காவைச் சேர்ந்தவர் சிலர் தொடர்ந்து அமெரிக்காவில் நோய் பரவலுக்கு சீனா பொறுப்பேற்க வேண்டும் என்று கருத்தைப் பரப்பி வருகின்றனர். இவர்கள், தங்கள் பொறுப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள, சீனா மீது பழி போட முயன்று வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்